Monday, December 20, 2004

வணக்கம்

அன்பார்ந்த இணைய நண்பர்களே,

எல்லோருக்கும் வணக்கம்.இதுநாள்வரைக்கும் கலகலவென்று 'லேடீஸ் ஹாஸ்டல்' போன்ற 'ஒண்டுக்குடித்தன'த்தில் வாழ்ந்துவிட்டு, வேண்டுமா, முடியுமா என்று யோசித்து யோசித்து ஒரு வழியாக இப்போதுதான் 'சொந்த' வீடு வாங்கியுள்ளேன். சும்மா சின்னதா 'ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாய்' ஒரு ·ப்ளாட் தான் !

வலைப்பூ என்ற இந்த அழகிய வடிவத்திற்கு முதலில் நான் சந்திரமதி, காசி இருவருக்கும் மற்றும் இதில் பங்காற்றிய எல்லோருக்குமநன்றி சொல்லக்கடமைப் பட்டுள்ளேன். என்னுடைய இந்தத் தனி வலைப்பூவை வடிவமைக்க உதவிய,.. இல்லையில்லை, முழுவதும் வடிவமைத்தே கொடுத்த தம்பி ஈழநாதனுக்கும் அதேபோல இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

'வலைப்பூவை' வாடவிடாமல் அடிக்கடி நீர் தெளித்து புத்துணர்ச்சியோடு வைத்திருக ்கவேண்டும் என்று ஏனோ மனதில் (நானாகவே தான்) ஏற்படுத்திக் கொண்டுவிட்ட கருத்து அகலாமல் மிகவும் படுத்தியது. விடாமல் தொடர்ந்து எழுதுவேனா என்ற சந்தேகமே 'சொந்த வீடு' எண்ணத்தைத் தள்ளிப்போட்டு வந்தது.

ஒவ்வொரு வலைப்பூவையும் பார்த்தால் இப்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. உதாரணமாக சுரேஷின் 'பிச்சைப் பாத்திரம்' மற்றும் நிர்மலாவின் 'ஒலிக்கும் கணங்கள்' பதிவுகளைப் படிக்கப் படிக்க இவர்கள் ஏன் இத்தனை நாளாக பதிய ஆரம்பிக்காமல் இருந்தார் என்று தான் தோன்றுகிறது.

ஒரேயொரு சின்னஞ்சிறு ஆதங்கம். சில பெயர்கள் தான் மனதை நெருடுகிறன. கவனத்தை ஈர்க்கவென்றோ, அதீத அடக்கம் காட்டும் நோக்கமோ தெரியவில்லை. இத்தனைக்கும் உள்ளடக்கம் சம்பந்தமேயில்லாமல் கட்டாயம் படிக்கவேண்டியதாகயிருக்கிறது.

எண்ணிக்கையில் மட்டுமில்லாமல் தரத்திலும் தமிழ் வலைப்பூக்கள் உயர்ந்து வருவது எத்தனை மகிழ்ச்சியளிக்கிறது தெரியுமா உங்களைப்போலவே எனக்கும் !

சரி, முதலில் ஒரு புதிய முயற்சியுடன் ஆரம்பிப்போம். பிறகு முடியும் போதெல்லாம் எழுதுவோம். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது, பழைய கதை/கட்டுரைகள், அவ்வப்போது போட்டு, இட்டுநிரப்ப (!) என்றுதான் துணிந்துவிட்டேன்.

'புதிய முயற்சி'யா ? என்ன அது என்றா கேட்கிறீர்கள்? அடுத்த பதிவிலே இந்த வினாவிற்கான விடையுண்டு. நான் தவறாகவும் இருக்கலாம். ஏனென்றால், உண்மையிலேயே இது தமிழ் வலைப்பதிவிற்குப் புதிதுதானா என்ற சந்தேகமுண்டு எனக்கு. ஏற்கனவே இதுபோல யாரேனும் செய்திருக்கிறார்களா?

சீனப் புராணங்கள், புராணக் கதைகள் போன்றவற்றின் மீது எனக்கு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் ஆர்வமே இந்த முயற்சிக்குக் காரணம். மற்றபடி கொடுக்கப்போகிற வடிவம் சற்றே மாறுபட்டிருக்கும். குழந்தைத்தனமாக என்றுகூடச் சிலர் நினைக்கலாம்.

அன்புடன் ஜெயந்தி சங்கர்

3 comments:

புதிய கனா said...

உங்களுடைய 'சீனப்புராணக் கதைகள்' பற்றிய பதிவுகள், பிரயோயனமானவைதான். ஒரு புதிய கலாச்சாரத்தைப்பற்றி அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

துளசி கோபால் said...

அன்பு ஜெயந்தி,

வனக்கம். நலமா?

சத்தமில்லாமல் வீடு கட்டீங்க! அட்டகாசமா இருக்கு! 'வல்லமை தாராயோ' வீட்டுப் பேரும்
'தூள்'

இனி தினமும் உங்க வீட்டுக்கும் ஒரு 'விஸிட்' கட்டாயம் உண்டு!

நல்லா இருங்க!

என்றும் அன்புடன்,
துளசி.

இராஜ. தியாகராஜன் said...

அன்புள்ள ஜெயந்தி சங்கர்,
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
அன்புடன்
இராஜ.தியாகராஜன்.

http://www.pudhucherry.com
http://thamizhilakkiyam.rediffblogs.com
http://www.thamizhmozhi.blogspot.com