Friday, April 20, 2007

குறிப்புகள்



சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விட நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றைச்  சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, மலேசியா உள்ளிட்டநாடுகளில் எண்ணற்ற சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரமாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. 8 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 1 குறுநாவல் தொகுப்பு, 1 சீனக் கவிதைகள் உள்ளிட்ட 34க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. 2014ஆம் ஆண்டில்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்என்ற இவரது முழுத்தொகுப்பு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது, கு. சின்னப்ப பாரதி இலக்கிய விருது உள்ளிட்ட நான்கு முக்கிய விருதுகளைப் பெற்றது. இடிதெய்வத்தின் பரிசு என்ற சிறார் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஆனந்தவிகடன் விருது2016, சீனக் கவிதைத் தொகுப்பு நூலான 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' 2009ல் நல்லி - திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருதைப் பெற்றது. 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006' சிறப்புப் பரிசு, 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது உள்ளிட்ட பல பரிசுகளும் விருதுகளும் வாங்கியுள்ளார்.  'பின் சீட்', 'திரைகடலோடி', 'முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்', ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் முறையே 2008, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சிங்கப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வாகின. பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ளார். 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் வேற்று மொழியில், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு கண்டுள்ளன. இவர் 2010ல் உள்ளூர் ஆங்கிலக் காலாண்டிதழில் எழுதிய, இவர் ஆங்கிலத்தில் எழுதிய, ‘Read Singapore’ என்ற சிறுகதை ‘Best New Singaporean Short Stories – volume1 தொகுப்பில் இடம் பெற்றதுடன், ரஷ்யமொழியாக்கமும் செய்யப் பெற்றுள்ளது.




ஜெயந்தி சங்கர்நூல்கள்

சிறுகதைகள்
1. நாலேகால் டாலர் (2005)  மதி நிலையம் வெளியீடு
2. பின் சீட் (2006)  மதி நிலையம் வெளியீடு
3. நியாயங்கள் பொதுவானவை (2006)  மணிமேகலை பிரசுரம்
4. மனுஷி (2007)  மதி நிலையம் வெளியீடு
5. திரைகடலோடி (2008)  மதி நிலையம் வெளியீடு
6. தூரத்தே  தெரியும் வான்விளிம்பு (2010) சந்தியா பதிப்பகம்
7.முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும் (2013) அம்ருதா பதிப்பகம்
8. நகரெங்கும் சிதறிய சுழிகள் (2016) வம்சி வெளியீடு


நாவல்கள்
9. வாழ்ந்து பார்க்கலாம் வா (2006) சந்தியா பதிப்பகம்
10. நெய்தல் (2007)  சந்தியா பதிப்பகம்
11. மனப்பிரிகை (2008)  சந்தியா பதிப்பகம்
12. குவியம் (2009) சந்தியா பதிப்பகம்
13. திரிந்தலையும் திணைகள் (2011)  சந்தியா பதிப்பகம்


கட்டுரைகள்
14. ஏழாம் சுவை (2005) உயிர்மை பதிப்பகம்
15. பெருஞ்சுவருக்குப் பின்னே  (2006) உயிர்மை பதிப்பகம்
16. சிங்கப்பூர் வாங்க (2006) விகடன் பிரசுரம்
17. ச்சிங் மிங் (2009) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
18. கனவிலே ஒரு சிங்கம் (2010) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
19. கூட்டுக்குள் அலையும் தேனீக்கூட்டம்(2010) அம்ருதா பதிப்பகம்

 குறுநாவல் தொகுப்பு
20. முடிவிலும் ஒன்று தொடரலாம் (2005) சந்தியா பதிப்பகம்
 

மொழிபெயர்ப்பு + தொகுப்பு
21.      மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள் (2007) உயிர்மை பதிப்பகம்
22.     என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழிசீனத்துச் சிறுகதைகள் (2011) காலசுவடு பதிப்பகம்
23.      இறந்தவளுக்குத் திருமணம்சீனத்துச் சிறுகதைகள் (2013) கயல் கவின் வெளியீடு


நூல் மொழிபெயர்ப்பு
24. சூரியனுக்கு சுப்ரபாதம் (2007) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
25. ஒளிந்திருந்த குரல்கள் (சீனாவின் நல்ல பெண்கள்) (2016) வம்சி வெளியீடு


வாழ்க்கை வரலாறு
26. இசையும் வாழ்க்கையும் (2007) சந்தியா பதிப்பகம்


சிறுவர் இலக்கியம்
27.  மீன் குளம் - சிறார் சீனக்கதைகள் (2008) மதி நிலையம் வெளியீடு
28.  இறைமகள் லூசான் - சீனத்து நாடோடிக் கதைகள் (2015) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
29. மூங்கிலும் ஆமையும் - சீனத்து நாடோடிக் கதைகள் (2015) அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
30. ராபின்ஸன் க்ரூஸோ ‍by டானியல் டேஃபோ (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
31. ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் by மார்க் ட்வைன் (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
32. இடிதெய்வத்தில் பரிசு ‍- சிறார் சீனக் கதைகள் (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
33. 'ஸன் வூ கோங்' (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
34. சீனப் பழமொழிக்கதைகள் (2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு
35. கரடி பொம்மையை எடுத்தது யார்? சிறார் நாவல் -(2016) புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு



Anthologies  -      1) வானவில் கூட்டம்  2) புதிய காளி 3) கனலும் எரிமலையும் 4) சுடும் நிலவு  5) பிரியத்தின் சிறகுகள் 6) வேறொரு மனவெளி 7) முகங்கள் 8)  இரவு 9) இருவாட்சி மலர் 2010 & 2012


English works/anthologies Published


1)       English Short Story - Read Singapore – Published in  the quarterly magazine
CeriphISSUE TWO – 2010

2)       English Short Story - Read Singapore – Published in  the English anthology

The Epigram Books Collection of Best New Singaporean Short Stories: Volume One


      978-981-07-6234-6

3)       English Short Story - Read Singapore – Published in the Russian anthology

To Go To S'pore. Contemporary Writing from Singapore. Edited by Kirill Cherbitski


      978-1-938781-17-9


English Book/s Published


1.         Loss and Laws and other Tamil short stories by Jayanthi Sankar (2015) by Kitaab International Publications

2.       Horizon afar and other Tamil short stories by Jayanthi Sankar (2016) by Kitaab International

3.       Who took Meena’s teddy? – Young Children’s novel – (2016) co authored with P.Muralidharan


ஆக்கங்கள் பிரசுரமான ஊடகங்கள்
வெளிநாட்டு அச்சு ஊடகங்கள் - அமுதசுரபி, கல்கி, கல்கி தீபாவளிமலர், உயிர்மை, காலச்சுவடு, வார்த்தை, உயிர் எழுத்து, மணல் வீடு, கனவு, செம்மலர், புதியபார்வை, கலைமகள், இந்தியா டுடே, ஆனந்தவிகடன் தீபாவளிமலர், அவள் விகடன், தமிழ் டைம்ஸ், ஊடறு, பெண்ணே நீ, அம்ருதா, தென்றல், வடக்குவாசல், தென்றல் முல்லை, ஃபெட்னா இதழ், இனிய நந்தவனம், மஞ்சரி, சிநேகிதி, முல்லைச்சரம், இருவாட்சி பொங்கல் மலர், காற்றுவெளி, அநங்கம், வல்லினம், திசையெட்டும், மலேசிய நண்பன், தமிழ்நேசன், மக்கள் ஓசை, மக்கள் குரல், இனிய உதயம், தாமரை, மௌனம், அகநாழிகை, காலகட்டம், நவீன விருட்சம், உப்பங்காற்று, தீராநதி, வாதினி
மின் ஊடகங்கள் - திண்ணை, பதிவுகள், சமாச்சார்,  திசைகள், சங்கமம், தமிழோவியம், சிக்கிமுக்கி, வல்லமை, உயிரோசை, சொல்வனம், செல்லினம், வல்லினம், தங்கமீன், எதுவரை, சிங்கப்பூர் கிளீஷே
உள்நாட்டு அச்சு ஊடகங்கள் - தமிழ்முரசு, சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர், நாம், சிரங்கூன் டைம்ஸ், தனி, இனி,


வெளிநாடுகளில் பெற்ற பரிசுகள்/விருதுகள்/அங்கீகாரங்கள்

v 

v இடிதெய்வத்தின் பரிசு என்ற சிறார் மொழிபெயர்ப்பு நூலுக்கு ஆனந்தவிகடன் விருது2016
v  பறந்து மறையும் கடல்நாகம்கட்டுரைத் தொகுப்புக்கு ராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது 2016
பறந்து மறையும் கடல்நாகம்கட்டுரைத் தொகுப்புக்கு ராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது 2016
v  பறந்து மறையும் கடல்நாகம்கட்டுரைத் தொகுப்புக்கு மாணிக்கவாசகர் பதிப்பகத்தின் மெய்யப்பன் அறக்கட்டளை சிறந்த நூல் விருது 2016
v  பறந்து மறையும் கடல்நாகம்கட்டுரைத் தொகுப்புக்கு நாங்கள் இலக்கியகம், மேல்சாத்தம்பூர் கருப்பசாமி நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய இலக்கியப்போட்டி 2015ல் முதல் பரிசு
v  2015ல்ஜெயந்தி சங்கர் நாவல்கள்முழுத் தொகுப்புக்கு திருப்பூர் கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு
v  2014ல்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்முழுத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்ncbh தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு
v  2014ல்திரிந்தலையும் திணைகள்நாவலுக்கு திருப்பூர் வெற்றிப்பேரவைப் பரிசு
v  2014ல்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்முழுத் தொகுப்புக்கு திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் பரிசு
v  2014ல்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்முழுத் தொகுப்புக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
v  2014ல்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்முழுத் தொகுப்பு  2013க்கானஜெயந்தன் படைப்பிலக்கிய விருது
v  2013ல்திரிந்தலையும் திணைகள்நாவலுக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின்  கரிகாலன் விருது 2012’
v  இவர் ஆங்கிலத்தில் எழுதிய, ‘Read Singapore’ என்ற சிறுகதை ‘Best New Singaporean Short Stories – volume 1 தொகுப்பில் இடம் பெற்றதுடன், ரஷ்யமொழியாக்கமும் செய்யப் பெற்றுள்ளது. 
v  2009 கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை 'புதிய அவதாரம்' இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிசம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது.
v  2008 (ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூரில் நடந்தேறிய நிகழ்வில்) உரையாற்றிய மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை. பீர் முகமது 'ஈரம்' சிறுகதையைச் சிலாகித்துப் பேசிவிட்டு, 'இருபத்தைந்தாண்டுகளில் எழுதப்படாத ஆகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை' என்றார்.
v  2008 - கனடாவின்தமிழ் இலக்கியத் தோட்டத்தின்  இயல் விருதுநடுவர் குழுவில் இடம் பெற்றமை
v  2009 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி 2008 விருது அளிக்கப்பட்டது.
v  2009 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' நூலுக்கு நல்லி - திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருது 2009'
v  2008 சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது.
v  2007 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பத்தாவது தொகுதியான 'சுடும் நிலவு' நூலில் 'வீடு' சிறுகதை தேர்வு/பிரசுரம்
v  2007 - 2006ஆம் வருடம் பிரசுரமான 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006'ல் - சிறப்புப் பரிசு பெற்றது.
v  சிறுகதை எழுதித்தரச் சொல்லி அழைப்பு - திரைகடலோடி - ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2007
v  2006 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் 'சொல்லாத சொல்' என்ற சிறுகதை முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற ஒன்பதாவது தொகுதியில் பிரசுரம்.
v  2005 - அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் 'சேவை' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
v  2005 - பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 'கடைசிக் கடிதம்என்ற சிறுகதை முதல் தகுதி - அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம்.
v  சிறுகதை எழுதித்தரச் சொல்லி அழைப்பு - நாலேகால் டாலர் - கல்வி தீபாவளி மலர் 2004

  
சிங்கப்பூரில் பெற்ற பரிசுகள்/விருதுகள்/அங்கீகாரங்கள்


Ø  2014 ’முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும்சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2014 க்குத் தேர்வு
Ø  2010 'திரைகடலோடி' சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2010 க்குத் தேர்வு
Ø  2008 சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது.
Ø  2006 - சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.
Ø  2005 - தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது கௌரவக் குறிப்பு - ‘வேண்டியது வேறில்லை' (குறுநாவல்) - நான்காமிடம்
Ø  2005 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா ) 'மழலைச்சொல் கேளாதவர்' என்ற சிறுகதை ஊக்கப்பரிசு.
Ø  2004 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் - 'முத்தமிழ் விழா' மற்றும்தமிழ் முரசுஏற்பாட்டில்வளர் தமிழ் இயக்கத்தின்ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் 'பொம்மை' சிறுகதை இரண்டாம் பரிசு
Ø  2001 - சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற முதல் (தங்கப்) பரிசு
Ø  2001 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை 'நொண்டி' (நுடம்) இரண்டாம் பரிசு.
Ø  2000 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசு.
Ø  1998 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
Ø  1990களின் இறுதி - 'தெளிவு', 'கீரை' போன்ற சிறுகதைகள் ஆறுதல் பரிசுகள் பெற்று சிங்கை வானொலியில் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன.

உரைகள்


ü  2015 சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் 'அவளுக்கும் கனவுகளுண்டு' என்ற தலைப்பில் உரை
ü  2013 நவம்பர்  9 அன்று சிங்கப்பூர் அரும்பொருளகத்தில் நடந்த எழுத்தாளர் விழா 2013ன் போதுபுனைகதைகளைப் புரிந்து கொள்ளுதல் பற்றிஆற்றிய உரை
ü  2013 அக்டோபர் 12 அன்று Asian Civilization Museum ல் நடந்த National Heritage Boardன் மின்மரபுடைமைத் திட்டத்தின் துவக்க நிகழ்வில் ஆற்றிய உரை.
ü  2013 ஆகஸ்ட் 22 அன்று மாணவர்களுக்கென்று கல்வி அமைச்சு நடத்திய எழுத்துத் திறன் போட்டியின் பரிசளிப்பு விழாவில்உள்ளூர் எழுத்தாளருடன் ஒரு கலந்துரையாடல்அங்கத்தில் ஆற்றிய உரை பரவலான பாராட்டைப் பெற்றது.
ü  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குவாலலம்பூரில் நடந்த சிறுகதைக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்ட போதுஅயலில் தமிழிலக்கியம்என்ற தலைப்பில் ஆற்றிய உரை சிறந்த கவனத்தைப் பெற்றது.
ü  31-10-09 அன்று ‘Under Covers’ சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நடந்த பெண் படைப்பாளிகள் கூட்டத்தில் தமிழரல்லாதோர் இருந்த அரங்கில் தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் மற்றும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் ஆற்றிய ‘Scars so similar and yet so different’ என்ற உரை. 
ü  4-01-09 அன்று இலக்கிய வட்டத்தில் ஆற்றியநவீன தமிழிலக்கியத்தில் பேசுபொருள்என்ற தலைப்பிலான உரை.


நேர்காணல்கள்

§  எஸ். பாலகிருஷ்ணன் - ஜெயந்தி சங்கர்: 'வேற்றுமைகளின் கொண்டாட்டமாகவே கலாசாரத்தைக் காண்கிறேன்'
§  புனைவுகளூடாகப் பல்லாயிரம் வாழ்க்கைகள் - மதுமிதா
§  குங்குமம் தோழி நேர்காணல் (15-03-2015) - ஸ்ரீதேவிமோகன்
§  சீன இலக்கியம் ஒரு நேர்காணல் (15-03-2015) - மதுமிதா
§  2014 ஏப்ரல் 18ஆம் தேதி ஷாந்தினி முத்தையா, அருண் மகிழ்நன் எடுத்த மின்னஞ்சல், காணொளி ஆகிய இரு நேர்காணல்கள்
§  சொல்வனம் இணைய இதழுக்காக மலேசியாவைச் சேர்ந்த கே.பாலமுருகன், ‘சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்என்ற -நேர்காணல்.
§  இனிய நந்தவனம் அச்சிதழுக்காக இதழாசிரியர் சந்திரசேகர் நேரில் வந்து (திருச்சியில்) எடுத்த பேட்டி
§  தமிழோவியம் இணைய இதழுக்காக திருமலை கொழுந்து நடத்திய விரிவான -நேர்காணல்
§  நிலாசாரல் இணைய இதழுக்காக கவிஞர் மதுமிதா எடுத்த பேட்டி


இதர இலக்கிய ஈடுபாடுகள்
o   தேசிய கலைகள் மன்றத்தின் முன்னெடுப்பில் GPA2015 தமிழ்ச் சிறுகதைப் தமிழ்ச் சிறுகதைப் பிரிவின் நடுவர் குழுவில் இடம் ஆக்கங்களை வாசித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்டது.
o   தேசிய கலைகள் மன்றத்தின் முன்னெடுப்பில் ‘கல்வெட்டு’ திட்டத்தின் கீழ் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியது.
o   சிங்கப்பூரின் மாணவர்களுக்கான சொற்களம் போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் நடுவராகப் பணியாற்றியது
o   எழுத்தார்வம் கொண்ட 30 பேருக்கு நடத்திய சிங்கப்பூர் தேசிய புத்தக வாரியத்தின் NBDCS (National Book Development Council of Singapore ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு - 1Oct2011&1Nov2011
o   சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் ஏற்பாடு செய்த முதியோர் இல்லங்களுக்குச் சென்று முதியோருடன் கலந்துரையாடி ஒரு சிறுகதை புனையும் pasSAGES என்ற  திட்டத்தில் முக்கிய பங்கேற்பு.  எழுதப்பட்ட சிறுகதை – கோடரித் தைலம். ஆங்கிலத்திலும் கதாசிரியராலேயே மொழிபெயர்க்கப்பட்டது.
o   தங்கமீன் வாசகர் வட்டத்தின் முதல் மூன்று , august 2016 மாதங்களில், எழுதப்பட்ட சிறுகதைகளை மதிப்பிட்டு  பரிசுக்குரியவற்றைத் தெரிவு செய்தது.

5 comments:

Kupps said...

nice to read a new blog in your site after very long.

keep writing.

thangaLaippaRRiya arumayyaanathoru kuRippu. padiththu magizhnthEn.

இப்னு அப்துல் ரஜாக் said...

pls visit and give your feedback
http://www.peacetrain1.blogspot.com/

Abundant Money said...

Please visit: suryakumarans.blogspot.com

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

செயந்தி படைத்த செழுந்தமிழ் நுால்கண்டு
வியந்து மகிழ்ந்தேன் விழித்து!

கவிஞா் கி.பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

செயந்தி படைத்த செழுந்தமிழ்நுால் கண்டு
வியந்து மகிழ்ந்தேன் விழித்து!

கவிஞா் கி.பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr